தினமும் காணாமல் போகும் நெல் மூட்டை : ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை ஸ்கெட்ச் போட்டு திருட்டு.. ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 4:06 pm
Paddy bundles Theft -Updatenews360
Quick Share

விழுப்புரம் : ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த உளுந்து மற்றும் நெல் மூட்டைகளை திருடிச் செல்லும் திருடர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு வெளியில் உணவு சாப்பிட சென்று வரும் நிலையில் அதை நோட்டமிட்ட இருவர் தினசரி இதுபோன்று இருசக்கர வாகனத்தில் ஒவ்வொரு மூட்டையாக கடத்தி சென்று வந்துள்ளனர்,

உளுந்து மூட்டையை இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லும் போது அங்கிருந்த விவசாயிகள் கையும் களவுமாக பிடித்தனர். அவனைப் பிடித்து விசாரித்ததில் அரகண்டநல்லூர் அருகே வசந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த அன்பரசு (வயது 22) மற்றும் ரெனால்ஸ்(வயது 25) ஆகிய இருவர் என தெரியவந்தது,

இதில் ஒருவன் தப்பி ஓடிய நிலையில் ஒருவன் மட்டும் சிக்கிக் கொண்டான் அவன் மீது வழக்கு பதிவு செய்த அரகண்டநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

இருவரும் உளுந்து மூட்டை இருசக்கர வாகனத்தில் எடுத்து கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலம் வெளியிடப்பட்டுள்ளது தற்போதைய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

Views: - 569

0

0