சீட்டுக்கும் நோட்டுக்குமான பேரம்.. அதிமுக பாஜக இடையே மோதல் குறித்து வேல்முருகன் எம்எல்ஏ விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2023, 5:03 pm
Velmurugan - Updatnews360
Quick Share

சீட்டுக்கும் நோட்டுக்குமான பேரம்.. அதிமுக பாஜக இடையே மோதல் குறித்து வேல்முருகன் எம்எல்ஏ விமர்சனம்!!

விழுப்புரத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் 500பேர் இணையும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் மற்றும் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டாக கிராமம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அளவில் கட்டமைப்புகளை பலப்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு நாளும் பல்லாயிரகணக்கான பொதுமக்கள், மாணவர்கள் தமிழக வழ்வுரிமை கட்சியில் இணைந்து வருகிறார்கள் அந்த வகையில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் குமரன் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோர் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பெரியார், அம்பேத்கர், சுதந்திர போராட்ட தியாகிகள் சிலைகளை அவமதிக்கும் செயலில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அவர்களுடைய சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்.

அரசு உறுதிமொழி குழவின் சார்பில் தமிழகம் முழுவதும் பயணம் செய்து அனைத்து சுங்கச் சாவடிகளிலும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனம் உட்பட தேசிய நெடுஞ்சாலை துறையினரால் விதிவிலக்கு அளிக்கப்பட்ட விருந்தினர்கள், விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்வதற்கு தனி பாதை வேண்டுமெனவும், இவர்களிடம் எக்காரணம் கொண்டும் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் தென்மண்டல இயக்குநரை அழைத்து நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.

சென்னையில் இயங்கிய 3 சுங்கச் சாவடிகளை மூடியிருக்கிறேன் தற்போது சட்டத்திற்க்கு புறம்பாக இயங்கிக் கொண்டிருக்கிற சுங்கச் சாவடிகள் மூட வேண்டுமென்று சட்டமன்றத்தில் பேசி நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மற்றும் ஒன்றிய அமைச்சருடன் பேசி இன்னும் சில சுங்கச் சாவடிகளை மூட இருக்கின்றனர்.

பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தல் என 3 தேர்தலிலும் திமுக தலைமையிலான கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன்.

இங்கு பாசிச பாஜக மதத்தின் பெயரால் மக்களை கூறு போடுகின்ற சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் நிம்மதியாக இந்தியாவில் வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கி பாசிசத்தை வளர்த்து வருகின்ற பாஜக வை வீட்டிற்க்கு அனுப்புவதற்க்காக நான் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று தொடர்ந்து பணியாற்றி வருகிறனே்.

ஆட்சிக் கட்டிலில் இருந்து இறங்குவதற்க்கு முன்பு நீண்டநாள் இழுவையில் இருக்கின்ற இந்த மசோதாவை பாஜக முயற்சி எடுத்திருக்கிறது. இதனால் பெண்களுக்கு உண்மையிலேயே 33 சதவீதம் இடஒதுக்கீடு தரவேண்டுமென்று காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்ட சட்ட மசோதா தற்போது ஆட்சி முடிவதற்க்குள் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

ஓட்டுக்காக என்றாலும் இதனையும், சிலிண்டருக்கு ரூ.200 குறைத்தையும் வரவேற்கிறேன். 10.5 சதவீதம் என்ற என்னை போன்ற பாமக தவிர்த்த ஏனைய வன்னியர் சங்க தலைவர்களால் உருவாக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜாதிவாதியாக கணக்கெடுப்பை உடனடியாக எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அனைத்து சாதி மக்களுக்கும் பாகுபாடும் இல்லாமல் இருக்கும், மேலும் பேசியவர் நதிநீர் மேலாண்மை நாணயத்தின் கட்டுப்பாட்டின்படி எப்படி என்எல்சி துணை இராணுவம் நிறுத்தி செயல்பட்டார்களோ எல்லா மக்களுக்கும் வழங்கப்பட வேண்டிய காவேரி நதிநீரை மக்களுக்கு பெற்றுத் தர ஒன்றிய அரசு ராணுவத்தை நிறுத்தி பெற்று தர வேண்டும் என்பது எனது கருத்து மத்திய பாதுகாப்பு படையை அமைத்து காவேரி நீரை திறந்து விட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் அதிமுக பாஜக இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து செய்தியாளர்களிடம் கேட்ட கேள்விக்கு எடப்பாடி அமித்ஷா இடையே இருபது சீட்டு கேட்டது விவகாரம் குறித்தான கருத்து தற்பொழுது தேர்தல் நேரத்தில் இன்றைக்கு எடப்பாடி அமித்ஷா இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசியலில் சீட்டு பேரம் படி இன்றைக்கே நேற்று பாஜகவில் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு இன்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி தற்போது அந்த சுற்றறிக்கை அறிக்கையில் அனுப்பி இரண்டாம் கட்ட தலைவர்கள் அடக்கி பேசுமாறு செய்துள்ளார். இது சீட்டுக்கான நோட்டுக்கான வேற அரசியலின் மறு வடிவம் என விமர்சனம் செய்தார்.

Views: - 234

0

0