திரையரங்குகள் திறப்பது குறித்து முதலமைச்சரை சந்திக்க உரிமையாளர்கள் முடிவு…!!

By: Aarthi
13 October 2020, 3:39 pm
theatre - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

டெல்லி, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் திரையரங்குகளை திறந்துகொள்ள அனுமதியளித்துள்ள நிலையில் தமிழக அரசு இன்னும் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை. அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்கு உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் திரையரங்குகளை திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திரையரங்குகளுக்கு வருபவர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்குவோம், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்புவோம், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதி செய்து கொடுப்போம், சமூக இடைவெளியை பின்பற்றுவோம் என்ற முடிவுகளுடன் முதலமைச்சரை சந்திக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். திரையரங்குகளை திறக்க அனுமதிக்குமாறும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.

Views: - 42

0

0