தைப்பூசம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : 3 மணி நேரம் காத்திருந்து பழனி முருகனை வழிபடும் பக்தர்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2024, 5:18 pm

தைப்பூசம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : 3 மணி நேரம் காத்திருந்து பழனி முருகனை வழிபடும் பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ஞாயிற்று கிழமையான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர்.

பழனி அடிவாரம் மற்றும் நகர்ப்பகுதி முழுவதும் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீர்த்தக் காவடி எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் படிப்பாதையிலும்,யானை பாதை வழியாகவும் , மின்இழுவை ரயில் வரிசையில் 10 கட்டணத்தில் மூன்று மணி நேரமும் ,50 ருபாய் வரிசையில் 2 மணி நேரமும் காத்திருந்து மலைக்கோவில் சென்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் மொட்டையடிக்கும் இடங்களான சரவன பொய்கை ,ஒருங்கிணைந்த முடி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இன்று ஞாயிற்று கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!