120 அடி ஆழ கிணற்றில் கேட்ட சிறுவனின் அலறல் சத்தம்… ஒரு மணி நேரப் போராட்டம்… இறுதியில் நடந்த திக் திக்…!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 8:30 am
Quick Share

தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கேத்துரெட்டிப்பட்டியில் 120 அடி ஆழ கிணற்றில் சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட நிலையில், துரிதமாக நடவடிக்கை எடுத்த தீயணைப்பு துறையினர் சிறுவனை மீட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் அருகே உள்ள கேத்திரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பவித்ரன் (14 ). இவர் இன்று அதிகாலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த 120 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்துள்ளார்.

மேலும் படிக்க: பங்காளிகளுக்குள் சொத்து பிரச்சனை… அண்ணனை துப்பாக்கியால் சுட்ட சகோதரன் ; மருத்துவமனையில் அனுமதி!!

இந்நிலையில், கிணற்றில் நான்கு அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் சிறு காயத்துடன் சிறுவன் உயிர்தப்பிய நிலையில், கிணற்றில் விழுந்த தன்னை காப்பாற்றுமாறு சிறுவன் சத்தம் போட, அவ்வழியாக வந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு, அவரது தந்தை சிவகுமாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, சிறுவனை மீட்க பொதுமக்களே கிணற்றில் இறங்கி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த முயற்சி தோல்வி அடையவே, சிறுவனை மீட்க வழி தெரியாமல் இருந்த பொதுமக்கள் உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு கட்டி மீட்டனர்.

பின்னர், சிறுவனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருக்கு போராடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 150

0

0