மது அருந்தும்போது தகராறு… தலையில் கல்லை போட்டு இளைஞர் கொலை

Author: kavin kumar
5 February 2022, 2:20 pm
Quick Share

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் அருள் விசுவாசம். லோடுமேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் அரசு மதுபானக்கடை அருகே அருள் விசுவாசம், ஆரோக்கிய ஸ்டீபன் மற்றும் குறசெபஸ்டியன் ஆகிய 3 பேரும் மது அருந்தி உள்ளனர். இந்நிலையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்படவே அருள் விசுவாசத்தை கூட இருந்த இரண்டு பேர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அருள் விசுவாசத்தை கொலை செய்த முத்தழகுபட்டியை சேர்ந்த ஆரோக்கிய ஸ்டீபன், குற செபஸ்டியன் ஆக இருவரை கைது செய்தனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த அருள் விசுவாசத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அருள் விசுவாசத்தை எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருகை புரிந்து விசாரணை மேற்கொண்டார்.

Views: - 463

0

0