வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம்: திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு..!!

Author: Rajesh
7 March 2022, 4:21 pm
Quick Share

கோவை: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக கவுன்சிலர்கள் 15 பேர் மீது போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து செய்துள்ளனர்.

கடந்த 4ம் தேதி மறைமுக தேர்தல் அடிப்படையில் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு நடக்க இருந்தது.
வெள்ளலூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 வார்டுகளில் அதிமுகவும், 7 வார்டுகளில் திமுகவும் வெற்றி பெற்றிருந்தனர்.

முன்னதாக தேர்தல் அலுவலகமான வெள்ளலூர் பேரூராட்சி வளாகத்திற்கு வெளியே திமுக மற்றும் அதிமுகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வாக்குப் பெட்டியை சாலையில் தூக்கி வீசப்பட்டது.

இதனால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி, தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலை ஒத்திவைத்து ரத்து செய்தார். இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான பாலசுப்புரமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் 15 கவுன்சிலர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பொது அமைதிக்கு குந்தகம், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாதது, பொது சொத்துக்கு சேதாரம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Views: - 686

0

0