சவாலுக்கு அண்ணாமலை தயாரா..? தருமபுரியில் பாஜக டெபாசிட் வாங்குமா..? திமுக எம்பி விடுத்த 3 சவால்கள்!!

Author: Babu Lakshmanan
9 January 2024, 9:42 pm
Quick Share

தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்பி செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து அமைக்கப்பட்ட 3 உயர் மின்விளக்கு கோபுரத்தை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- அண்ணாமலைக்கு மூன்று சவால். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தயாரா…? அண்ணாமலை தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க தைரியம் இருக்கிறதா..? நின்றால் வெற்றி பெற்று காட்டட்டும். அவரால் வெற்றி பெற முடியாது. தருமபுரியில் பாஜக வேட்பாளர் 2024 தேர்தலில் டெபாசிட் வாங்கி காட்டட்டும். மூன்று சவால்களை அவர் ஏற்க தயாரா..? என மூன்று சவால்களை தெரிவித்தார்.

அண்ணாமலை நடப்பது நடைபயணம் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் என்று சொல்லிவிட்டு, முதலில் 100 நாட்கள். இரண்டாவதாக 150 நாட்கள். முதல்கட்டமாக 150 நாட்கள் ஆகிறது. அண்ணாமலை செல்வது நடைபயணம் கிடையாது. அண்ணாமலைக்கு எப்போதெல்லாம் டாக்டர்கள் அழைத்து பத்திரிகையாளர்களை அழைத்து நீங்கள் கோபப்படுகிறீர்கள்.

டென்ஷன் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று கூறியவுடன் உடனடியாக 800 மீட்டர் முதல் ஒரு கிலோ மீட்டர் வரை ஒவ்வொரு ஊரிலும் நடக்கிறார். இதற்குப் பெயர் நடை பயணம் கிடையாது. அந்தந்த ஊருக்கு சென்று சும்மா நின்று செல்வது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தொடர்ந்து நடந்தார். அதுதான் நடை பயணம். இவர் எப்பொழுதெல்லாம் ஆசைப்படுகிறாரோ, எப்பொழுது இவருக்கு மருத்துவர் ஆலோசனை சொல்கிறார்களோ, அப்பொழுது மட்டும்தான் நடை பயணம் மேற்கொள்கிறார், என கூறினார்.

Views: - 309

0

0