‘போனமுறை கேப்டனுடன் வந்தேன்… இந்த முறை’.. பிரச்சாரத்தின் போது கண்கலங்கிய பிரேமலதா விஜயகாந்த்…!!

Author: Babu Lakshmanan
8 April 2024, 1:59 pm
Quick Share

கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார் என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மறைந்த விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார்.

மேலும் படிக்க: நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு… நெல்லை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ்!!

அப்போது, பேசிய அவர், சிவக்கொழுந்துவின் குரல் டெல்லியில் மக்களால் ஒலிக்க போகின்றது என தெரிவித்தார். எம்.ஜி.ஆர்இ ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று பேரும் மனிதர்களாக பிறந்த தெய்வங்கள் என்ற அவர், அதிமுக தேமுதிக மக்கள் விரும்பும் கூட்டணியாகவும், நாளை சரித்திரம் படைக்கும் கூட்டணி, என்றார். தேர்தல் வாக்குறுதியாக விக்கிரவாண்டி – கும்பகோணம் சாலை விரைந்து முடிக்கப்படும் என்றும், புதிய பல்கலைக்கழகம் கொண்டு வர நடவடிக்கை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

தொடர்ந்து, மக்களுக்காக வாழ்ந்த கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்த பிரேமலதா, ஆட்சி பலமும், பணபலமும் கொண்டு மச்சானும், பச்சானும் வந்தாலும் இங்கு அவர்கள் பாச்சா பலிக்காது என பிரேமலதா தெரிவித்தார்.

மேலும் படிக்க: நள்ளிரவில் கொள்ளை முயற்சி தோல்வி.. அதிகாலை ஊழியர்கள் வரும் வரை காத்திருந்த திருடன் ; தனியார் வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்.!!!

பலமுறை பண்ருட்டி கேப்டனுடன் வந்த நான், இன்று தனியாக வந்துள்ளேன் என்றும், கேப்டன் எங்கும் செல்லவில்லை, நம்முடன் தான் இருக்கின்றார் என பேசிக்கொண்டே கண் கலங்கினார். அப்போது, கூட்டத்தினரும் கண் கலங்கிய நிலையில் தன்னை தேற்றிக்கொண்டு பரப்புரையை தொடர்ந்தார்.

உடன் கடலூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்சி சம்பத் உட்பட அதிமுக, தேமுதிக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 401

0

0