ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம்… சட்டமசோதாக்கள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி திமுகவினர் ஒட்டிய போஸ்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 4:37 pm
Dmk Governor - Updatenews360
Quick Share

ஆளுநர் அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கும் சட்ட மசோதாக்கள் என திமுக வடக்கு மண்டல தலைவர் போஸ்டர்.

கோவை திமுக வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல் சார்பில் 21 மசோதாக்கள் ஆளுநர் அலமாரியில் நெடுந்தோக்கம் தூங்கிக் கொண்டிருப்பதாக கோவை மாநகரில் பல்வேறு பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என பேரறிஞர் அண்ணா கூறியதை முதன்மையாக கொண்டு ஆளுநர் ஆண்டு செலவு 6.5 கோடி எனவும் 2020 முதல் இந்த ஆண்டு மே 30ஆம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளதாக 21 நிறைவேற்றப்படாத சட்ட மசோதாக்கள் குறித்து பட்டியல் அச்சிடப்பட்டுள்ளது.

அதில் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்தம், ஆன்லைன் ரம்மி ஒழிப்பு மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் குறிப்பிடப்பட்டு “இவையெல்லாம் ஆளுநர் அலமாரியில் நெடுந்தூக்கம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த போஸ்டரில் இதற்கு மேலும் தமிழ்நாட்டு மக்கள் குறட்டை விட்டு தூங்க முடியுமா? தூங்கினால் துயரப்பட நேரும் எச்சரிக்கை!
என அச்சிடப்பட்டுள்ளது

Views: - 448

0

0