சிங்கார வேலனே தேவா… கலைத்திருவிழாவில் கவனத்தை ஈர்த்த மாணவன் : நாதஸ்வரம் வாசித்து அசத்திய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 7:01 pm
Nathaswaram - Updatenews360
Quick Share

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவனின் நாதஸ்வரம் அசந்து போன ஆசிரியர்கள் அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்ட கல்வித் துறை சார்பாக கலைத் திருவிழா கடந்த மூன்று நாட்களாக திண்டுக்கல் மாநகராட்சி மையப்பகுதியில் தூய வலனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இக்கலை நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, கொடைக்கானல், வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர், குஜிலியம்பாறை உள்ளிட்ட மாவட்டத்தில் பத்து தாலுகாவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் ஆடல் பாடல் மற்றும் கட்டுரை போட்டி தனித்திறமையை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் 3 நாட்களாக நடைபெற்றது.

இந்த கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட நடன போட்டிகளும் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமையில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் முன்னிலையிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் சசிதரன் சிறப்பாக நாதஸ்வரம் வாசித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தார்.

இதில் பழைய சினிமா பாடலான தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாடலை அப்படியே வாசித்து காட்டினார். அரசு பள்ளி மாணவர் ஒருவர் அழிந்து போகும் கலையை கையில் எடுத்திருப்பதும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் செல்வராஜ் உட்பட பள்ளி ஆசிரியர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்ற பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

https://vimeo.com/779888946

மேலும் அரசு பள்ளி ஆசிரியர் செல்வராஜ் கூறும் பொழுது தற்போது பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கட்டுரைப் போட்டி உட்பட தனித் திறமை போட்டிகள் நடைபெறுவதால் மாணவ மாணவிகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதற்கு தமிழக அரசுக்கும் தமிழக கல்வித்துறைக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.

Views: - 358

2

0