நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் எத்தனை வாக்கு சதவீதம் தெரியுமா? பரிதாப நிலையில் சென்னை.. முதலிடத்தில் தருமபுரி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2022, 9:20 am
TN ELection Percentage - updatenews360
Quick Share

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலக்கான உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று காலை 7 மணி முதல் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாநகராட்சி வார்டுகள் 1,369, நகராட்சி வார்டுகள் 3,824 ,பேரூராட்சி வார்டுகள் 7409 என மொத்தம் 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேலும்,மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தம் 52.22% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதைப்போல்,நகராட்சி பகுதிகளில் மொத்தம் 68.22% வாக்குகளும், பேரூராட்சி பகுதிகளில் மொத்தம் 74.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 675

0

0