பணிநேரத்தில் சீருடையுடன் மது அருந்திய காவலர்… வைரலாகும் வீடியோ…. நடவடிக்கை பாயுமா..?

Author: Babu Lakshmanan
7 July 2022, 9:28 am

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணி நேரத்தில் காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் ஒருவர் காவலர் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் காவல் உதவி சிறப்பு ஆய்வாளராக கந்தசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை நேரத்தில் போலீஸ் சீருடையுடன் ஒருவருடன் சேர்ந்து மதுபானக்கடை பாரில் அமர்ந்து மது அருந்துவதும் அவர் கூட வந்த நபருக்கு தின்பண்டம் கொடுப்பதும் பின் போதை தலைக்கேறிய பிறகு என்ன செய்வது என்று தெரியாத வீடியோ வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மது அருந்திவிட்டு தகராறுகளில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கும், வாகனத்தில் மது அருந்தி செல்பவர்களை கண்காணித்து அதை தடுப்பதற்கும் காவல்துறையினர் பணியில் ஈடுபடும் நிலையில், காவல்துறையினர் ஒருவரே சீருடையுடன் மது அருந்துவது பொதுமக்களிடையே முகசூலிப்பையும், சிரிப்பலையையும் ஏற்படுத்தியது.

திமுக ஆட்சியில் காவல்துறையினர் ஊருக்கு மட்டும் தான் உபதேசம் சொல்வார்களா என்று பொதுமக்கள் பேசி வருகின்றனர். சீருடையுடன் மது அருந்தும் காவல் உதவி சிறப்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?