மீண்டும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. அதிர்ச்சியில் அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 9:44 pm
ED Raid - Updatenews360
Quick Share

மீண்டும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. அதிர்ச்சியில் அதிகாரிகள்!!

திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி, நொச்சியம் மாதவம்பெருமாள், கொண்டையம்பேட்டை ஆகிய பகுதியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த குவாரியில் அரசு .அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகள் மணல் அள்ளுவதாக குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக மணல் குவாரியில் மூன்று அடி தான் மணல் அள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தும் 10 அடிக்கு மேல் மணல் அள்ளுவதாகவும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் 12 ம் தேதி 3 க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்து கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் (stock point) பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு தொடங்கி சோதனை என்பது இரவு ஏழு மணி வரை நீடித்தது.

மத்திய துணை ராணுவ படையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சோதனையின் முடிவில் கட்டு கட்டாக ஆவணங்கள் சிக்கியது.

மேலும் உதவி பொறியாளர் சாதிக் பாஷா இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சத்யராஜ் ஆகிய மூன்று பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் நள்ளிரவு 2 மணி வரை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பிறகு மேல்விசாரணைக்கு அழைக்கும் போது சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும் என நிபந்தனையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் நொச்சியம் மாதவம் பெருமாள் கோவில் தாளக்குடி, கொண்டையம்பேட்டை மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

கொண்டையம் பேட்டை குவாரி செயல்படாத நிலையில் தற்போது ஸ்டாக் பாயிண்ட்டில் உள்ள மணல் அளவு எவ்வளவு? நாள் ஒன்றுக்கு எவ்வளவு மணல் விற்பனை செய்யப்படுகிறது? அனுமதிக்கப்பட்ட அளவில் மணல் விற்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Views: - 192

0

0