பட்டா மாறுதலுக்கு ரூ.6000 லஞ்சம்… பணத்தை வாங்கும் போது சரசரவென நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை ; திகைத்துப்போன பெண் அதிகாரி!!

Author: Babu Lakshmanan
18 October 2023, 9:31 am

பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் பெருமாளகரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் சுதா என்பவர் மதியழகன் என்பவரிடம் பட்டா மாற்றுவதற்காக 6000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து மதியழகன் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபாலிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் மதியழகன் லஞ்ச பணம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் பொழுது, திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொண்ட குழு சுதாவை லஞ்ச பணத்துடன் கையும் களவுமாக பிடித்தது.

இது குறித்து திருவாரூர் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

  • New Update Announcement From Jana Naygan team Today ஜனநாயகன் படத்தின் மாஸ் அப்டேட்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!