மளமளவென அதிகரித்தது தங்கம் விலை… மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் ; சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
18 October 2023, 10:31 am
Quick Share

மளமளவென அதிகரித்தது தங்கம் விலை… மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் ; சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,480-க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.45 உயர்ந்து ரூ.5,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் உயர்ந்து ரூ.78க்கும், வெள்ளி கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.78000-க்கும் விற்பனையாகிறது.

Views: - 769

0

0