பணம் வாங்கி மிரட்டும் சுற்றுச்சூழல் பொறியாளர்… கிரஷர் மற்றும் குவாரி சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2024, 6:30 pm
CQWA
Quick Share

பணம் வாங்கி மிரட்டும் சுற்றுச்சூழல் பொறியாளர்… கிரஷர் மற்றும் குவாரி சங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு!

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் மீது ஏராளமான புகார் குவிந்துள்ளது. இது சம்மந்தமாக KCP Infra Limited நிறுவனத்தின் தலைவரும், கிரஷர் மற்றும் குவாரி சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் K.Chandraprakash அவர்கள் தனது நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அவர் பேசியதாவது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை சுற்றுச்சூழல் பொறியாளர் சந்திரசேகர் எம் சாண்ட் யூனிட் வாங்கிவிட்டு கிரஷர் இயக்குபவர்களிடம் பணம் வாங்கி மிரட்டுவதாகவும், மாதம் ஒரு லட்சம் ரூபாய் கேட்பதாகவும், கிரஷர் ஒரு கிலோ மீட்டர் தூரம் உரிமம் உள்ளவர்களிடம் மாதம் ரூ.3 லட்சம் பணம் கேட்பதாகவும், சட்டவிரோத குவாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து ரூ.1 லட்சம் பணம் வாங்குவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் வருகிறது.

தயவு செய்து யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு போய்விடுவார்கள், நாளைக்கு ஒரு பிரச்சனை என்றால் நாம்தான் சந்திக்க நேரிடும், யாரும் அரசு விதிகளை மீறி செயல்பட வேண்டாம் மீறினால் வாழ்வாதாரமே போய்விடும். பணம் கொடுத்து அந்த பணிகளை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Views: - 171

0

0