வரலாற்றை சிதைக்க முயற்சித்தால் மோசமான பின்விளைவுகளை சந்திப்பீர்கள்… திமுகவை எச்சரிக்கும் ஆர்பி உதயகுமார்…!!

Author: Babu Lakshmanan
8 January 2024, 8:13 pm
Quick Share

வரலாற்றை சிதைக்க முயற்சித்தால் மோசமான பின்விளைவுகளை சந்திப்பீர்கள்… திமுகவை எச்சரிக்கும் ஆர்பி உதயகுமார்…!!

ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை, இலக்கணத்தை, வரலாற்றை சிதைக்க ஆட்சி அதிகாரத்தையும், அதிகாரிகளையும் வைத்து முயற்சி பெற நினைத்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை எஸ் எஸ் காலனியில் அமைந்துள்ள பிராமண கல்யாண மஹாலில் வைத்து ஸ்ரீ மஹா பெரியவரின் ஆராதனை விழா அட்சய பாத்திரம் டிரஸ்ட் டின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்று பேருக்கு ஸ்ரீ மகா பெரியவா விருதினை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த‌ முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கூறியதாவது :- ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி வீர விளையாட்டு போட்டி ஜல்லிக்கட்டு நெடுங்காலமாக பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியாக இருந்தாலும் வீரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிக்காட்டும் ஒரு விளையாட்டாக இருக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படுகிற பரிசு என்பது மிகவும் கௌரவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு பல வகைகளிலே விளையாடப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக் கட்டு போட்டி தமிழகத்திலே மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம் பாலமேடு ஆகிய பகுதிகளிலும் அதோடு சிவகங்கை, புதுக் கோட்டை, சேலம்,தேனி பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. 

விலங்குநல வாரியம் மற்றும் பீட்டா உள்ளிட்ட சில தனியார் அமைப்புகள் ஜல்லிக்கட்டு தடை செய்ய கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்தது. ஜல்லிக்கட்டு தடையை நீக்க கூறி பல இடங்களில் போராட்டம் நடத்து வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்து 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். இளைஞர்கள் போராடிய போது, அதிமுக அரசு இழந்த உரிமையை மீட்க, சட்டம் தனியாக சட்டம் இயற்றி அதை ஒப்புதல் பெற்று அந்த சட்டத்தின் மூலமாக இழந்த உரிமை மீட்டெடுக்கப்பட்டது. 

ஜல்லிக்கட்டு என்பது வீரத்துடன் இணைந்த ஒன்று இந்த விளையாட்டை மக்களிடத்தில் இருந்து பிரித்து விட முடியாது. இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு உரிமை பறிபோனபோது, அதற்கு காரணமானவர்கள் அன்றைக்கு ஆட்சியிலே இருந்தவர்கள் யார் என்பது உலகத் தமிழர்கள் நன்றாக அறிவார்கள். இன்றைக்கு மதுரை சேர்ந்த அமைச்சர் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தீர்வு காண்கின்ற வகையில் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு. நன்றாக வரலாறு தெரிந்த  அமைச்சருக்கு இதுவும் தெரிந்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன். 

அது மட்டுமல்ல ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே, ஜல்லிக்கட்டு புகழை உலகறிய செய்வதற்காக வாடி வாசலுக்கே முதன் முதலாக முதலமைச்சர்  வந்து பச்சைக்கொடி அசைத்து கோயில் காளைகளுக்கு பூஜை செய்து காளைகளை அவிழ்த்துவிட்டு அதற்கு பச்சைக் கொடி அசைத்து பெருமை சேர்த்தவர்   எடப்பாடியார். இந்த நிகழ்வுகள் இந்த மண்ணின் மைந்தனாக இருக்கிற அமைச்சருக்கு இந்த வரலாறு மறந்து போயிருக்காது.

அதோடு இளைஞர்களை ஊக்குவிக்கின்ற வகையிலே முதன்முதலாக கார் உள்ளிட்ட பரிசுகளை வழங்கியது அதிமுக. இன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு ஆணவமாக அமைச்சர் பேசுவதை பார்க்கிறபோதும் அவர் எச்சரிக்கை விடுப்பதை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்சுபவர்கள் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை சொல்லுகின்ற கடமையும் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது.

அந்த பொது வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தை தான் வாடிவாசல் மூடப்படுமா என்று மக்கள் எழுப்புகிற அந்த கேள்வியை நாஙக்ள் எழுப்புவதில் அமைச்சர் என்ன அரசியலைக் கண்டார்  என புரியவில்லை. இன்றைக்கு ஜல்லிக்கட்டு மைதானத்தை  கீழக்கரையில் கட்டப்பட்டு இருக்கிற இடம் அதிமுக ஆட்சியில் ஒரு கால்நடை பூங்கா அமைக்க வேண்டும் என்ற அடிப்படையிலே அடையாளம் காணப்பட்டு அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டது. 

கால்நடைகளை பூங்கா அமைத்து அந்த பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைத்த அந்த இடத்திலே ஒரு விளையாட்டு மைதானம் போல ஜல்லிக்கட்டுனுடைய அடிப்படை இலக்கணத்தையே தகர்க்கின்ற வகையிலே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இன்றைக்கு ஆட்சி அதிகாரம் இருக்கின்ற காரணத்தினாலே நீங்கள் பேசுவதெல்லாம் சட்டம் ஆகவும் நீங்கள் பேசுவதெல்லாம் நியாயமாக உங்களுக்கு தோன்றுவதாக எண்ணுகிறீர்கள்‌.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த மைதானத்தில் இருந்து நடத்தி விட முடியுமா அல்லது இது என்ன கிரிக்கெட் விளையாட்டு போட்டியா? அவர்களெல்லாம் ஒன்றுகூடி அந்த விழாவை நடத்தி அதனுடைய வீரத்தையும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் நாகரிகத்தையும் கட்டி காப்பாற்றி வருவது தான் அந்த வரலாறு அமைச்சர்களுக்கு அந்த வரலாறு நன்றாக தெரியும். 

எடப்பாடி அவர்கள் நேரிலே வந்து அந்த வாடி வாசலில் அவர் பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்து ஜல்லிக்கட்டுக்கு உலக பெருமையை பெற்றுக் கொடுத்தார். நீங்கள் ஏதோ வானத்திலிருந்து வந்தவர் போலவும் ஒரு லட்சம் பேரை திரட்டி அந்த மைதானத்தை திறக்க போகிறேன். ஒரு லட்சம் அல்ல ஒரு கோடி பேர்களை திரட்டி அந்த மைதானத்தை திறந்தாலும் மண்வாசனை வாடிவாசல் ஜல்லிக்கட்டு இலக்கணத்தை நீங்கள் தகர்த்தால், அதனுடைய பின் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் 

இன்றைக்கு நீங்கள் ஆட்சி அதிகாரத்திலே பணபலத்தில் அதிகாரம் களத்திலே உச்சபட்ச இடத்திலே இருப்பதினால் நீங்கள் சொல்வதெல்லாம் சட்டம் ஆகிவிடாது.  ஆகவே பாரம்பரியமாக 1500 ஆண்டுகள் கட்டிக் காப்பாற்றி வந்த அந்த இலக்கணத்தை பாரம்பரியத்தை பண்பாட்டை வீரத்தை, வரலாற்றை நீங்கள் சிதைக்க முற்படுவீர்கள். ஆனால் அதற்குரிய விளைவுகளை நீங்கள் அமைச்சர் மண்ணின் மைந்தர் அதை சந்தித்தே ஆக வேண்டும். அதிலிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது. 

உங்கள் அதிகாரத்தை வைத்து வேண்டுமானாலும், ஆட்சியை வைத்து வேண்டுமானால், அதிகாரிகளை வைத்து வேண்டுமானால் நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ளலாம். ஆனால் மக்கள் நினைத்ததை நீங்கள் நடத்த தவறவிட்டீர்கள் என்பதை மட்டும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் எச்சரிக்கை விடுத்தால் பயந்து ஓடுகிறவர்கள் அல்ல அதிமுக தொண்டர்கள். இதை கொச்சைப்படுத்த வேண்டாம். இது மண்வாசனைக்காக எழுப்பப் படுகிற மண்ணின் மைந்தர்களால் எழுப்பப்படுகிற உரிமை குரல்.

இந்த உரிமை குரலை நீங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நசுக்க நினைப்பவர்கள் ஆனால் இந்த மதுரையினுடைய வரலாறு அரசியல் வரலாறு இந்த மதுரையிலே கொடிகட்டி பறந்தவர்கள் எல்லாம் கொடியை இழந்து கோட்டை இழந்து கொத்தளத்தை இழந்து எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற வரலாறையும் அமைச்சர் அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

காளை வளர்ப்பு அதனுடைய பராமரிப்பு செலவுக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்று சொல்லி 32 மாதங்கள் ஆகிவிட்டது. வாய் கிழிய பேசுகிற அமைச்சர் ஒரு லட்சம் பேரை திரட்டி முதலமைச்சரை வைத்து ஜல்லி கட்டு மைதானத்தை திறப்பேன் என்று வீர வசனம் பேசுகிறார். உங்களைப் போன்று நாங்கள் எந்தவிதமான விதிமுறைகளிலும் ஈடுபடவில்லை என்பதை நானும் எச்சரிக்கையாக நீங்கள் கொடுத்த எச்சரிக்கைகளுக்கு கடும் எச்சரிக்கையை தெரிவிக்கிறேன்.

ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை இலக்கணத்தை வரலாற்றை நீங்கள் சிதைக்க ஆட்சி அதிகாரத்தையும் அதிகாரிகளையும் வைத்து நீங்கள் முயற்சி பெறுவதானால் அதனுடைய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் காலம் உங்களுக்கு பதில் சொல்லும். நாங்களும் உரிமை குரல் எழுப்புவோம். உரிமைக்குரல் எழுப்புவதிலே நீங்கள் மிரட்டினாலும், உருட்டினாலும் ஏன் எங்கள் உயிரே போனாலும் நாங்கள் ஒரு பொழுது பின்வாங்கியது இல்லை, என்றார்

Views: - 189

0

0