அமைச்சரை சுற்றி வளைத்த நிர்வாகிகள்.. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதில் பேச முடியாமல் திணறிய செஞ்சி மஸ்தான்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 1:41 pm
Gingee - Updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்ட திண்டிவனம் நகர செயலாளர்கள் கூட்டம் நகர அவைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த திண்டிவனம் திமுக முன்னாள் நகர செயலாளர் கபிலன் தற்போது நகர செயலாளராக இருக்கும் ஆசிரியர் கண்ணனிடம் என்னை ஏன் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு அழைக்கவில்லை திமுக உங்கள் வீட்டு கட்சியா என சரமாரியாக அமைச்சர் கண் முன்னே கேள்வி எழுப்பினார்.

இதனால் திமுக முன்னாள் நகர செயலாளர் கபிலனுக்கும் தற்போது நகர செயலாளராக இருக்கும் ஆசிரியர் கண்ணனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் அமைச்சர் கண் முன்னே திட்டிக் கொண்டனர். முன்னாள் நகர செயலாளர் கபிலன் வெளியேறியவுடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கழகம் முன்னோடிகளுக்கு பதவி தராமல் புதிதாக கட்சியில் வந்த சேர்ந்தவர்களுக்கு கவுன்சிலர் சீட்டும் பதவியும் வாரி வாரி வழங்கினார்கள்.

திண்டிவனம் மேம்பாலம் கீழ் புதுவை பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை யாரோ ஒரு அண்ணாச்சிக்கு மட்டுமே கடையை வழங்கி உள்ளீர்கள் திமுகவினருக்கு யாருக்கும் வழங்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரைத் தொடர்ந்து நகரப் பொருளாளர் சின்ன ராஜேந்திரன் நான் 30 லட்சம் செலவு செய்து என் மனைவியை கவுன்சிலராக ஆகி உள்ளேன் எனக்கு இதுவரையில் நகராட்சி வேலை யாரும் தருவதில்லை. கட்சி சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ்களில் என் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறி அமைச்சரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பால்வளத் துறை இயக்குனர் பதவி கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒரு ஆளுக்கு உங்களுக்கு வேண்டிய பட்ட நபர் என்பதற்காக பொறுப்பு வழங்கி உள்ளீர்கள் என கவுன்சிலர்கள் மாறி, மாறி கேள்வி எழுப்பினர்.

திமுக கவுன்சிலர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பல குற்றச்சாட்டுகள் அடுக்கிய நிலையில் அமைச்சரால் பதில் சொல்ல முடியாமல் செயல் வீரர்கள் கூட்டம் இத்துடன் முடிகிறது என பேசி தனது உரையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிறைவு செய்தார்.

அமைச்சரை திமுக நிர்வாகிகள், கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முன்னதாக சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அமைச்சருக்கு பாதுகாப்புக்காக வந்த போலீசார் உள்ளே வந்தபோது திடீரென திமுகவினர் போலீசாரை மடக்கி நீங்கள் உள்ளே வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை வெளியே அனுப்பியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 189

0

0