ரூ.2000 நோட்டுகளை மாற்றித் தருவதாக தங்க நகை வியாபாரியிடம் ரூ.1.27 கோடி பறிப்பு : கோவையில் அதிர வைத்த கும்பல்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2023, 4:34 pm
Cbe - Updatenews360
Quick Share

கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். தங்க நகை வியாபாரி. இவர் தனியார் வங்கி ஒன்றில் வீட்டுக்கடன் வாங்கினார்.
அந்த வங்கி மேலாளர் குட்டி என்பவரை பிரகாசுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பிரகாசிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் 15 சதவீதம் கமிஷன் கிடைக்கும் என்றும், அதற்கு சிலர் இருப்பதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பிரகாஷ் ரூ.1 கோடிய 27 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளுடன் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் சென்றார்.

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் பிரகாசிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றது. பணம் பறித்துச் சென்ற கும்பலை கோவை போலீசார் 12 மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.

இந்த பணம் பறிப்பு சம்பவம் குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரி நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது, இந்த பணம் பறிப்பு சம்பந்தமாக ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணம் ,2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் தங்கை நகை வியாபாரி பிரகாசை தொடர்பு கொண்ட இந்த கும்பல் தங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இருப்பதாகவும், எனவே நீங்கள் ரூ 85 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் 2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மேலும் பிரகாசை நேரில் சந்தித்து 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய பிரகாஷ் கடந்த 10 ந்தேதி ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 வரை பணத்துடன் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.

அப்போதுதான் இந்த பணம் பறிப்பு சம்பவம் நடந்தது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க வால்பாறை சரக டி எஸ் பி கீர்த்தி வாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் கொள்கை சம்பவத்துக்கு பயன்படுத்த காரின் பதிவு எண்ணைகொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 6 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து பங்கு போட்டு பிரிக்கப்பட்டரூ. 1 கோடியே 27 லட்சத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வங்கியிலேயே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு உரிய அவகாசம் கொடுத்துள்ளது. எனவே இது போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமார வேண்டாம்.

மேலும் இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை தங்க நகை வியாபாரி பிரகாசிடம் கேட்டுள்ளோம்.இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்க தொகை ரூ.20 ஆயிரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார். அப்போது அந்த வங்கி மேலாளரிடம் பழக்கம் ஏற்படுகிறது.

Views: - 246

0

0