முதல் நாளே இப்படியா…? வகுப்பறையை பார்த்து நொந்து போன பள்ளி மாணவர்கள்… கோடை விடுமுறைக்கு பிறகு அரசுப் பள்ளியின் அவலம்..!!

Author: Babu Lakshmanan
12 June 2023, 4:13 pm
Quick Share

வேலூர் அருகே கோடை விடுமுறை முடித்து பள்ளி திறந்த முதல் நாளில் வகுப்பறைக்குச் சென்ற மாணவர்கள் வேதனைக்குள்ளாகினர்.

வேலூரில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 2023 – 2024 கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று துவங்கப்பட்டது. பள்ளி துவங்கி முதல் நாளில் 4,44,046 விலையில்லா பாடபுத்தகங்களும், 711357 நோட்டு புத்தகங்களும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இப்பள்ளியில் 800 மாணவர்களுக்கு பாடபுத்தகங்களும் நோட்டு புத்தங்களும் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் ஜூன் ஏழாம் தேதி திறக்கப்பட உள்ள பள்ளிகள் வெயிலின் தாக்கத்தால் ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை திறக்கப்படும் என்றும், ஜூன் 14ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை திறக்கப்படும் என்றும், தமிழக கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று ஜூன் 12ஆம் தேதி ஆன ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது.

பள்ளி திறக்கும் முதல் நாளான இன்று வேலூரில் உள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் விலையில்லா புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களிடையே கலந்து உரையாடி பேசிய விட்டு சென்று விட்டார்.

இன்று முதல் நாள் பள்ளி என்பதால் அப்பள்ளியில் தூய்மை செய்யப்பட்டு உள்ளதா..? என மாணவர்களின் வகுப்பறையை சென்று ஆய்வு கூட செய்யாமல் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றது அப்பள்ளி மாணவர்களிடையே பெரும் வேதனை அளித்தது.

பள்ளி திறக்கப்படும் முன்பு பள்ளிகளில் உள்ள பழுதடைந்த பொருட்களையும், உட்காரும் மேஜைகள் சுத்தம் செய்து வகுப்பறையில் உள்ள ஒட்டடை அடித்து சீரமைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்ததை எந்த அரசு பள்ளிகளும் பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 226

0

0