விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி.. தரமற்ற விதை குறித்த புகாரில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் : விரக்தியில் விபரீத முடிவு..!!

Author: Babu Lakshmanan
27 March 2023, 6:30 pm
Quick Share

திருவண்ணாமலை : தனியார் விதை கம்பெணியிடம் வாங்கிய பருத்தி விதை தரமற்ற முறையில் இருப்பதாக வேளாண் துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத விரக்தியில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராமஜெயம். இவர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பருத்தி சாகுபடி செய்துள்ளார்.

ஆத்தூர் பகுதியில் இயங்கி வரும் ராசி விதைகள் உற்பத்தி நிலை அதிகாரிகளிடம், சுமார் 15 கிலோ விதைகளை பெற்று பருத்தி நடவு செய்த விவசாயி ராமஜெயம் கடந்த மூன்று மாதங்கள் கடந்த நிலையில், பருத்தி பயிர் முறையாக வளரவில்லை என பருத்தி விதை தயாரிப்பு அதிகாரியிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், விதை தயாரிப்பு நிறுவனம் குறித்து செங்கம் வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகளிடம் பலமுறை தனியார் கம்பெனியின் விதைகளை ஆய்வு செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

ஆனால், புகார் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இனி தனியார் விதை தயாரிப்பு கம்பெனியால், எந்த ஒரு விவசாயியும் விதைகள் வாங்கி பாதிக்கக் கூடாது என கூறி விவசாயி ராமஜெயம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் போலீசார் விவசாயி ராமஜெயத்துடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு செங்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

  • anbumani அதிகாரம் மட்டும் கிடைத்தால்.. அசந்தே போவீங்க : கோவையில் சவால் விட்ட அன்புமணி!!
  • Views: - 362

    0

    0