உரிய ஆவணமின்றி கட்டு கட்டாக பணம்.. ரூ.1.65 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2024, 11:18 am
Amount Seized
Quick Share

உரிய ஆவணமின்றி கட்டு கட்டாக பணம்.. ரூ.1.65 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..!!

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கு உண்டான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைக்கு மீறி யாரேனும் பணம் கொண்டு செல்கின்றார்களா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சைபுளியம்பட்டி டானா புதூர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று இரவு தாளவாடி துணை வருவாய் வட்டாசியர் பிரபாகரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தபோது காரைக்குடியில் இருந்து கோவை மாவட்டம் செல்வதற்காக வந்த வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 1.95 லட்சம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.

உடனடியாக அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் காரில் வந்த நபர்களை விசாரணை செய்த போது பணத்தை எடுத்து வந்த நபர் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பதும் அவர் கோவை பகுதியில் நிலம் வாங்குவதற்காக அந்த பணத்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிய வந்தது.

இருப்பினும் அவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் உமாசங்கர் மற்றும் சத்தியமங்கலம் வட்டாட்சியர் மாரிமுத்து ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Views: - 88

0

0