குப்பையில் வீசப்பட்ட அரசு மருத்துவமனை மாத்திரைகள்… நகராட்சி நகர் நல மையத்தின் அலட்சியம்… நடவடிக்கை பாயுமா..?

Author: Babu Lakshmanan
24 July 2023, 4:22 pm
Quick Share

மேட்டுப்பாளையத்தில் நகர்நல மையத்தின் முன்பு மக்களுக்கு அளிக்கும் மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆனைக்கார தெரு பகுதியில் நகராட்சி நகர் நல மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி வந்து தங்களின் உடல் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று வருகின்றனர். மேலும், இந்த நகர் நல மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த நகர் நல மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் நல்ல மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் அங்குள்ள குப்பை தொட்டி பகுதியில் கிடந்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏழை மக்களுக்காக செயல்படும் இந்த மருத்துவமனையில் வரிப்பணத்தை வீணடிக்கும் விதமாக நல்ல மாத்திரைகளை குப்பையில் கொட்டியது பெரும் அதிர்ச்சனை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மேட்டுப்பாளையம் நகராட்சி நகர் நல மையத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குப்பை அள்ளும் வண்டியில் மருந்துகள் கொண்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நோயாளிகள் உபயோகப்படுத்தும் மாத்திரைகள் குப்பையில் கிடப்பது மக்களிடையே அத்திருப்பித்து ஏற்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை தலையிட்டு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் மக்கள் கோரிக்கையாக உள்ளது.

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப் போக்கால் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Views: - 272

0

0