பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் ஜிகே வாசன்? பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவு எடுப்பதாக அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 பிப்ரவரி 2024, 1:23 மணி
gK vasan
Quick Share

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் ஜிகே வாசன்? பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவு எடுப்பதாக அறிவிப்பு!!

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து

அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசினார்.

அப்போது அவர், இம்மாதம் 12ம் தேதி காலை 10 மணிக்கு த.மா.காவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூர் அசோகா ஓட்டலில் நடைபெற உள்ளது.

அந்த கூட்டத்தில் பொதுக்குழு நிர்வாகிகள் கலந்துக் கொள்வார்கள். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்தபின், யாருடன் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

  • Ramadoss தீட்சிதர்கள் மட்டுமே விளையாட கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்!
  • Views: - 230

    0

    0