போதைப்பொருள் கடத்தத் துணிந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி.? ஏன் தெரியுமா.?

Author: Rajesh
17 June 2022, 5:29 pm
Quick Share

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். இந்த நிலையில் இவர் தற்போது, “குட் லக் ஜெர்ரி” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம், 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் ஆகும்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர்களை ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு போஸ்டரில் அவர் கையில் துப்பாக்கியுடன் யாரோ ஒருவரை நோக்கி சுடுவது போல உள்ளது. மற்றொரு போஸ்டரில் ஜான்வி கபூர் மறைந்திருப்பதைப் போல் உள்ளது. இந்த போஸ்டர்களில் ஜான்வி கபூர் மூக்குத்தி அணிந்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த “கோலமாவு கோகிலா” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண குடும்பம் எப்படி போதை மருந்தை கடத்துகிறார்கள் என்ற சுவாரஸ்யமான கதையமைப்புடன் உருவாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. “குட் லக் ஜெர்ரி” திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழில் “கோலமாவு கோகிலா” ஹிட்டானதைத் தொடர்ந்து ஹிந்தியில் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

Views: - 526

1

0