ஆளுநர் தமிழிசையின் ட்விட்டர் கணக்கு ஹேக்.. விசாரணையில் இறங்கிய போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan17 ஜனவரி 2024, 8:28 காலை
ஆளுநர் தமிழிசையின் ட்விட்டர் கணக்கு ஹேக்.. விசாரணையில் இறங்கிய போலீசார்!!
தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை மீட்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கிய மர்ம நபர்கள் யார், எதற்காக முடக்கினார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Views: - 215
0
0