குரூப் 2 தேர்வில் குளறுபடி… அதிருப்தியடைந்த தேர்வர்கள் ; தாமதமாக தொடங்கிய தேர்வால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 11:59 am
Quick Share

தமிழகம் முழுவதும் நடந்த குரூப் 2 தேர்வில் குளறுபடி நடந்ததால் தேர்வர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 186 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வு துவங்கியது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடர்பான தோ்வும் நடைபெறுகின்றன.

குரூப் 2 தேர்வில், தேர்வர்களின் பதிவெண் மாறியதால், அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் தரப்படும். தேர்வு துவங்கியதில் இருந்து கணக்கிட்டு தேர்வர்கள் 3 மணி நேரம் தேர்வு எழுத அனுமதி தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதில் வினாத்தாளை பார்த்த தேர்வர்கள், விடைகளை பார்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் குரூப் 2 தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேபோல, திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் குரூப் 2 தேர்வில் தேர்வரைகளில் வினாத்தாளில் குறிப்பிட்ட அரை கண்காணிப்பாளரின் பெயரில் குளறுபடி ஏற்பட்டதால் இரண்டு மணி நேரம் தாமதமாக தேர்வு தொடங்கியுள்ளது.

திண்டுக்கல்லில் மதுரை சாலையில் உள்ள பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு அங்கு சுமார் 1650 தேர்வர்கள் இன்று நடைபெறும் இந்த குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் தேர்வு அறை கண்காணிப்பாளர்களின் பெயரும் வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்ட பெயரும் மாறி இருந்ததால் குளறுபடி ஏற்பட்டு காலை 9:30 மணிக்கு துவங்க வேண்டிய தேர்வானது 2 மணி நேரம் தாமதமாக 11:15 க்கு துவங்கியது.

சரியாக 2:15மணிக்கு முடிவடையும் தேர்வு 45 நிமிட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் மாலை 3 மணி அளவில் துவங்கி 6 மணிக்கு நிறைவடையும். மேலும் தேர்வு நடைபெறும் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்ற குரூப் 2 தேர்வு குளறுபடியின் காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாக துவங்கியதால் தேர்வர்கள் சிரமம் அடைந்தனர்.

Views: - 357

0

0