தொடர் கனமழை எதிரொலி… பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
23 May 2024, 10:11 am
Quick Share

நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாகிய நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது இதை அடுத்து பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: ஆடிய ஆட்டம் என்ன…? RCB செய்த மெகா தவறு… 17 ஆண்டு கனவு தகர்ந்தது… கிண்டலடிக்கும் CSK ரசிகர்கள்!!

பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ள நிலையில் தற்சமயம் நீர்மட்டம் 94.5 அடியாக உயர்ந்துள்ளது. இதை அடுத்து பில்லூர் அணை திறக்கப்பட்டு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, கரையோர கிராமங்களான தேக்கம்பட்டி, ஓடந்துறை, பாலப்பட்டி, வச்சினாம்பாளையம், சிறுமுகை ஆலங்கொம்பு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Views: - 102

0

0