கோவை அருகே நகைக் கடையில் 12 கிலோ தங்கம் கொள்ளை : துப்பு துலக்க முடியாத வகையில் நூதன திருட்டு.. விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 November 2022, 9:46 pm
Gold theft -Updatenews360
Quick Share

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் நகை கடை ஷட்டரை உடைத்து 1/2 கிலோ தங்க நகை மற்றும் 6 கிலோ வெள்ளி கொள்ளை. காரமடை போலீசார் விசாரணை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை மாரியாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சாந்தாமணி. இவர் காரமடை வடக்கு ரதவீதியில் நகை கடை நடத்தி வருகிறார். கடந்த 17ஆம் தேதி இரவு சாந்தாமணி வழக்கம்போல் நகைக் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குசென்று விட்டார்.


நேற்று வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்று விட்டதால் நகைக்கடையை திறக்கவில்லை.இந்தநிலையில் இன்று சனிக்கிழமை காலை வழக்கம்போல் சாந்தாமணி நகைக்கடையை திறப்பதற்கு வந்தார்.

அப்போது கடையின் இரும்பு ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த சாந்தாமணி உள்ளே சென்று பார்த்தபோது நகைக்கடையில் இருந்த 12 கிலோ அளவிலான தங்க நகைகள் மற்றும் ஆறு கிலோ வெள்ளிப் பொருள்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் கொள்ளையர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவின் ஹாட் டிஸ்க்கையும் எடுத்து சென்று விட்டதாகத் தெரியவருகிறது. கொள்ளை சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கோவையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது.

நகை கடையில் மோப்பம் பிடித்த நாய் வீரா சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளையில் துப்பு துலக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தடி மிகுந்த சாலையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பையு ஏற்படுத்தி உள்ளது.

Views: - 346

0

0