திமுக – காங்கிரஸூம் அவங்களுக்கு ஆதரவு… உடனே நடவடிக்கை தேவை ; மத்திய அரசை உசுப்பி விடும் அர்ஜுன் சம்பத்…!

Author: Babu Lakshmanan
10 அக்டோபர் 2023, 3:49 மணி
Quick Share

காவிரி விவகாரத்தில் திமுக காங்கிரஸ் அரசியல் நாடகமாடுகிறது என்றும், இதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள 27 அடி உயர வேலுக்கு உலக நன்மைக்காக சத்ரு சம்கார ஹோமம் மற்றும் பால் அபிஷேகம் இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசியதாவது :- காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 14 ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் காவிரி நதிநீரை பெற வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ் கண்டித்தும், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

காவிரி விவகாரத்தில் திமுக காங்கிரஸ் அரசியல் நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். காங்கிரசும், திமுகவும் அமாஸ் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மத்திய அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில் பாலாஜிக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏன் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு திமுக துணை போகிறது. உளவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கோரிக்கை வைத்தார்.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 324

    0

    0