அதானி, அம்பானியை விட திமுக எம்பிக்களுக்கு சொத்து… எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் ; அர்ஜுன் சம்பத்..!!

Author: Babu Lakshmanan
12 அக்டோபர் 2023, 8:36 மணி
Quick Share

ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகர்கள் தனது ரசிகர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி வரும் நிலையில், அந்த வரிசையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு கண்ணியம் காக்கும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் வரும் 14ம் தேதி காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும் சட்டமன்றத்தில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மான நடவடிக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் பேசியதாவது :- ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவில் உலக புகழ் பெற்ற கோவிலாகும். அப்படிபட்ட இந்த கோவிலை சிலுவை மலையாக மாற்றுவோம் என பேசியது கண்டிக்கத்தக்கது. இதை பேசியவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை கண்டித்து நாளை போராட்டம் நடக்கவுள்ள நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதம் நிகழாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியை அதிகரிக்க வேண்டும்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று நீண்ட வருடங்கள் உள்ள இஸ்லாமிய கைதிகள் உள்ளிட்ட இஸ்லாமிய கைதிகள் விடுதலை செய்வது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகள் தேச பாதுகாப்புக்கு உகந்தது அல்ல. வாக்கு அரசியலுக்காக திமுக, அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

சொத்து வரி, மின் கட்டணம், விலைவாசி உயர்வு காரணங்களால் பொதுமக்கள் அவதியுற்று வரும் நிலையில், மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். இதனால், தமிழக அரசு மோட்டார் வாகன வரி உயர்வு ரத்து செய்ய வேண்டும்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் உலக முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் என்பதால், இந்தியா, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இங்கு இருக்ககூடிய கம்யூனிஸ்ட் காங்கிரஸ் பாலஸ்தீன மக்களை ஆதரிக்கிறோம் என்ற பெயரில் ஹமாஸ் செய்யும் பயங்கரவாத செயலை ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

லியோ திரைப்பட விவகாரத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு எந்த அறிவுரையும் சொல்வதில்லை. அரசியலுக்காக மக்களுக்கு மாலைநேர வகுப்பு உள்ளிட்ட செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில், தனியார் திரையரங்குகளில் தனது ரசிகர்கள் ஏற்படுத்திய சேதம் குறித்து எதுவும் செய்யவில்லை. மேலும், லியோ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி இருப்பதால் படம் வெளியாகும் போது, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் இருப்பதால், தனது ரசிகர்களுக்கு விஜய் நல்ல அறிவுரை வழங்க வேண்டும்.

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், அஜித் போன்ற நடிகர்கள் வரிசையில் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் கண்ணியம் காக்கும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும். ஏனெனில், விஜய் ரசிகர்கள் அனைவரும் புள்ளிங்கோ போன்று மாறி வருகின்றனர். காவிரி ஒழுங்காற்று குழுவில் சொல்லும் தண்ணீர் அளவை கர்நாடக திறந்துவிட வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சி இருப்பதால் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டிய தானே. காவிரி விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் நடவடிக்கை எப்போதும் துரோகம் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் சனாதனம் பேசிய குறித்து உதயநிதியிடம் விளக்கம் கேட்டது வரவேற்கத்தக்கது.

கிறிஸ்து மதம் மாறிய பின்பு இந்து மதத்தை தவறாக பேசுவது கண்டிக்கத்தக்கது. முஸ்லீம், கிறிஸ்து மக்களின் வாக்குகளை பெறுவதற்காக சனாதனம் குறித்து பேசுகிறார்கள். ஜாதி வாரிய கணக்கெடுப்பு செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை செய்யவும் முடியாது, மாநில அரசு தான் எடுக்க முடியும். ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான ஜாதி பிரிவுகள் உள்ளது.

தமிழகத்தில் நடக்கக்கூடிய ஒரு கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி கூட அரசின் சார்பில் செலவு செய்யவில்லை. பக்தர்கள் தரும் காணிக்கை அடிப்படையில் செய்யப்படுகிறது. அமலாக்கத்துறை செய்த சோதனை அடிப்படையில் திமுக எம்பி ஆ.ராசா சொத்துக்கள் முடக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இதுபோன்று தான் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சோதனையில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதானி, அம்பானியை விட திமுக எம்பிக்கள், அதிக அளவில் முறைகேடாக சொத்து சேர்த்து உள்ளது, என தெரிவித்தார்.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 384

    0

    0