நேர்மையாக இருக்கும் அதிகாரிகள்தான் இன்று பணியிடமாற்றம் ஆகிறார்கள் : திமுக அரசை மறைமுகமாக விமர்சித்த இயக்குநர் பேரரசு!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 8:08 pm
Perarasu
Quick Share

நேர்மையாக இருக்கும் அதிகாரிகள்தான் இன்று பணியிடமாற்றம் ஆகிறார்கள் : திமுக அரசை மறைமுகமாக விமர்சித்த இயக்குநர் பேரரசு!

திண்டுக்கல் மாவட்டம் தனியார் திரையரங்கில் அய்யய்யோ திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் மற்றும் ஸ்ரீஷா சிங்கம் ஐபிஎஸ் காமராஜ் அவருடைய ஆவணப்படமும் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு இயக்குனர் சங்கம் பொருளாளருமான பேரரசு திருக்காரங்களால் வெளியிடப்பட்டது

சினிமாவில் சாதித்தவர்களை பார்ப்பதை விட மக்களுக்காக சேவை செய்பவர்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியான தருணம்
மக்களுக்கு சேவை செய்பவர்கள் மட்டுமே மிகப்பெரிய சாதனையாளர்கள் அவர்களைப் போற்றி புகழ வேண்டும் சினிமா நடிகர் நடிகைகள் இயக்குனர்களின் சம்பளத்தை கூட்டுவதற்காக ரசிகர்கள் நூறு ரூபாய் டிக்கெட்டை 200 ரூபாய்க்கு வாங்குகின்றனர் ரசிகர்கள் நடிகர்களின் நடிப்பை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்

இன்றைய காலகட்டத்தில் காவல்துறையின் 10% காவல்துறையினர் மட்டுமே நேர்மையாக மக்களுக்கு உழைக்கின்றனர் காவல்துறையினர் மாறாமல் இருந்தாலும் அரசியல்வாதிகள் அவர்களுக்கான காவல் அதிகாரிகளாக மாற்றி விடுகின்றனர் ஏழை எளியவர்களுக்கு இன்று நியாயம் கிடைப்பதில்லை வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது

காவல்துறை அதிகாரிகள் துணைப் போவதால் மட்டுமே அரசியல்வாதிகள் பலர் இன்னும் வெளியில் தெரிகிறார்கள். ஒருவர் இருவர் மட்டுமே உள்ளே போகிறார்கள் 80% போலீஸ் அதிகாரிகள் நேர்மையான ஒரு அரசியல்வாதிகள் கூட வால் ஆட்ட முடியாது மக்களை ஏமாற்றவும் முடியாது.

எங்கேயாவது ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி இருந்தால் அவர்தான் அவர்தான் நமக்கு தெய்வம் அவரை நாம் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் பல போலீஸ் அதிகாரிகள் இன்று நேர்மையாக இருப்பதின் காரணமாக இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக இல்லாமல் இருந்தால் மட்டுமே இடமாற்றம் செய்யப்படுவார்கள் ஆனால் தற்போது நேர்மையாக இருந்தால் அந்த அதிகாரியை இடம் மாற்றம் செய்கிறார்கள்.

திரைப்படத்தில் சிங்கம் புலி கரடி என மிகைப்படுத்தி படத்தை எடுப்போம் அதை நம்பி ரசிகர்கள் மன்றம் வைக்கக் கூடாது ரசிகர்கள் திரைப்படத்தை பார்க்க பார்க்க எங்களது சம்பளம் தான் நாங்கள் உயர்த்தி கொண்டே செல்வோம் சம்பாதித்த சம்பளத்தை வைத்து ரசிகர்களுக்கு பிரித்துக் கொடுக்க போவதில்லை
ஆனால் நேர்மையான அரசியல்வாதிகள் காவல்துறையினர் செயல்படும்போது அவர்களை ஊக்கப்படுத்தினால் அது உங்களுக்கு நன்மை அதன் மூலம் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையும் தேர்தலில் போட்டியிடும் எம்எல்ஏ தேர்தலுக்கு முன்பு கணக்கு காட்டும் போது பத்து லட்சம் காட்டினால் தேர்தலுக்குப் பிறகு அவரது சொத்து மதிப்பு 100 கோடி மாறுகிறது.

அதை எப்படி வருவது என்று நாம் கேட்பதில்லை ஆனால் ஒரு நடிகன் 100 கோடிக்கு 150 கோடிக்கு சம்பளம் வாங்கினால் இவ்வளவு சம்பளம் கேட்கிறோம் அதிர்ச்சி அடைகிறோம்.

சினிமா நடிகர்கள் சம்பளம் வாங்குவதை அதிர்ச்சி அடையும் ரசிகர்கள் அரசியல்வாதிகள் திடீரென நூறு கோடி வரை சம்பாதிப்பது கேள்வி கேட்பதில்லை அதிர்ச்சி அடையவும் இல்லை என நம்மிடம் விழிப்புணர்வு இல்லை மக்களை ஏமாற்றுவதற்கு இலவச பொருட்கள் தருகிறார்கள் என திரைப்பட ட்ரெய்லர் மற்றும் டீசர் விழாவில் இயக்குனர் பேரரசு பேசினார்

Views: - 127

0

0