வெள்ளியங்கிரி மலையில் பெண் தரிசனம் செய்தது எப்படி? விதிகளை மீறியதா வனத்துறை? சர்ச்சை புகைப்படம் வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2024, 5:02 pm
vellingiri
Quick Share

வெள்ளியங்கிரி மலையில் பெண் தரிசனம் செய்தது எப்படி? விதிகளை மீறியதா வனத்துறை? சர்ச்சை புகைப்படம் வைரல்!

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையை பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள இக்கோவிலின் கிழக்கு பகுதியிலேயே, பக்தர்கள் முருகனின் ஏழாவது படை வீடு என போற்றும் மருதமலை அமைந்து உள்ளது.

வெள்ளியங்கிரி மலை, இமயமலையில் உள்ள கைலாயத்திற்கு இணையாக பக்தர்களால் போற்றப்படும் மலையாகும். இங்கு புனித பயணம் மேற்கொள்வதை பலரும் வழக்கமாக வைத்து உள்ளனர்.

பல அதிசயங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த வெள்ளியங்கிரி மலையில் பல அற்புத மூலிகைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இங்கு உள்ள ஏழு மலைகளும் ஒவ்வொரு வகையான தனித்துவமும், சிறப்புகளும் கொண்டதாகும்.

இங்கு ஏராளமான சுனைகளும் சிறிய கோவில்களும் உள்ளன. ஏழுமலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தால் கைலாயத்திற்கு சென்று சிவனை தரிசித்த பயன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் முதல் வருகிற மே மாதம் வரை 4 மாதம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் வனப் பகுதியில் இருந்து வனவிலங்குகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரிக்க துவங்கியது. எனவே பாதுகாப்பு காரணங்கள் கருதி தற்பொழுது வெள்ளியங்கிரி செல்ல பக்தர்கள் அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையைச் சேர்ந்த ராதா, அழகு நிலைய கலைஞர் என்பவர் சமூக வலைதளத்தில் பொற்கொடி என்ற பெயரில் உள்ள அவர் வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

அடர்ந்த வனப் பகுதிக்குள் பெண்கள் செல்ல 10 வயது முதல் 60 வயது வரை செல்லக் கூடாது என மருத்துவம் கலந்த அறிவியலை நம் முன்னோர்கள் கூறி சென்று உள்ளனர்.

அடர்ந்த வனப் பகுதியில் வயதுக்கு வந்த பெண்கள் சென்றால் மாதவிடாய் காலத்தில் ரத்த வாடை வீசும் அதனால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் ஏற்படும், செங்குத்தான மலைப் பகுதி என்பதால் திருமணமான பெண்கள் சென்றாள் கர்ப்பம் கலைய வாய்ப்பு உள்ளது.

மேலும் நாட்டில் பொதுமக்கள் வசிக்கின்ற பகுதிகளில் கூட கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது.

இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு எவ்வாறு வழங்க முடியும் போன்ற காரணங்களாலும் மேலும் மருத்துவக் கலந்த அறிவியல் காரணங்களுக்காக முன்னோர்கள் மலைக் கோயில்களுக்கு பெண்கள் வழிபட செல்ல வேண்டாம் என்று கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.

ஆனால் தற்பொழுது உள்ள வெளிநாட்டு கலாச்சார மோகத்திலும், நாங்கள் ஆண்களுக்கு இணையாக வாழ்கின்றோம் என்று சில பெண்கள் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களை வைரலாகி வருகிறது.

மேலும் வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி எவ்வாறு அனுமதி அளித்தனர் என்று பல்வேறு தரப்பு மக்கள் கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 197

0

0