பழனி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு : தீபத் திருநாளை முன்னிட்டு கோவில் நிர்வாகம் போட்ட அதிரடி மாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2022, 11:53 am
Palanii - Updatenews360
Quick Share

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் வருகையை ஒட்டி மலைக் கோவிலுக்கு சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று மாலை பயணிதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு நஞத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் பழனி கோவிலில் அதிகரித்துள்ளது.

திருக்கார்த்திகை முன்னிட்டு பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள் மலை அடிவாரத்தில் இருந்து பழனி மலை கோவிலுக்கு செல்லும் படிப்பாதைகளில் ஒவ்வொரு படிகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியபடியே மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மற்றும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வருகை தந்துள்ளதால் பக்தர்கள்‌ நலன்கருதி, பக்தர்கள் மேலே செல்வதற்கு குடமுழுக்கு நினைவிருக்கும் வழியாகவும், தரிசனம் முடித்து கீழே இறங்கும்போது படிப்பாதை வழியாக அடிவாரத்திற்கு வரும் வகையிலும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் வருகையை ஒட்டி பழனி கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Views: - 407

0

0