கோவையில் சிறப்பு காவல் படை வீரர்கள் 4 பேர் உட்பட 428 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது..!

12 September 2020, 8:11 pm
Quick Share

கோவை: கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவலர் படையை சேர்ந்த 4 வீரர்கள் உள்பட 428 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 4 ஆம் அணி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற்று வரும் வீரர்களுக்கு அவ்வப்போது கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்றும் 23, 24, 25, 25 வயதுள்ள 4 வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பி.ஆர்.எஸ். காவலர் பயிற்சிப் பள்ளியை சேர்ந்த 28 வயது பெண் காவலர், 46 வயது ஆண் காவலர், காவலர் குடியிருப்பை சேர்ந்த 41 வயது பெண், அரசு மருத்துவமனையை சேர்ந்த 33 வயது பெண் மருத்துவப் பணியாளர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர கணபதியில் 32 பேர், சூலூரில் 21 பேர், மேட்டுப்பாளையத்தில் 20 பேர், ராமநாதபுரத்தில் 16 பேர், சிங்காநல்லூரில் 13 பேர், வடவள்ளி, ரத்தினபுரியில் தலா 11 பேர், பீளமேடு, ஒண்டிப்புதூரில் தலா 10 பேர் உள்பட 428 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 665 ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 64, 67 வயது மூதாட்டிகள், 47 வயது ஆண், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 60, 61 வயது முதியவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 81 வயது முதியவர் ஆகிய 6 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 495 பேர் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்து 754 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 562 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Views: - 5

0

0