டாஸ்மாக் கடைகளில் அமைச்சர் பெயரை சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டும் ரவுடிகள் : பாதுகாப்பு கேட்டு ஊழியர்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2023, 6:37 pm
Tasmac - Updatenews360
Quick Share

தேனி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரை சொல்லி, “கரூர் கம்பெனி” என்ற பெயரில் வரும் ரவுடிகள், தேனி மாவட்டத்தில் உள்ள 92 டாஸ்மாக் மதுபான கடை விற்பனையில் 30 சதவீதம் பணம் கேட்டும் பணம் கொடுக்காத கடைகளை அடைக்கச் சொல்லியும் மிரட்டுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

அவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச் சொல்லி மிரட்டும் வடிவேல், சதீஷ் உள்ளிட்ட ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், டாஸ்மாக் ஊழியர்களை பாதுகாக்கவும் டாஸ்மாக் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் தேனி ஆட்சியர் சஜீவனாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, தேனி கருவேலநாயக்கன்பட்டியில் இயங்கும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் மதுபான கிடங்கிற்கு சென்ற முன்டாஸ்மாக் ஊழியர கூட்டுக் குழுவினர் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுட்டனர்.

பின், மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். டாஸ்மாக் மேலாளரிடம் இது குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாஸ்மாக் ஊழியர்களின் கூட்டுக் குழுத் தலைவர் மோசன் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைச் சொல்லி மாவட்ட முழுவதும் ஒன்றை கோடி ரூபாய்க்கு மேல் கரூர் கம்பெனி என்ற பெயரில் வந்தவர்கள் வசூல் செய்கிறார்கள்.

ஊழியர்களை மிரட்டுகிறார்கள். பணம் கொடுக்காத கடைகளை அடைக்க சொல்லி அமைச்சர் பெயரால் டாஸ்மாக் நிர்வாகத்தை மிரட்டுகிறார்கள்.

அந்த கும்பல் அடக்கச் சொல்லும் கடையை வாய்மொழி உத்தரவு மூலம் நிர்வாகத்தினர் அடைகிறார்கள். அந்த நெருக்கடிக்கு மாவட்ட நிர்வாகம் ஆளாகி இருக்கிறது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வசூலிக்கும் அவர்கள், மதுபானத்தை அதிக விலைக்கு விற்க சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

இவ்வாறாக அரசின் பெயரை எடுக்கும் நோக்கில் அமைச்சரின் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்யும் இந்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

விசாரணை செய்வதாக மாவட்ட ஆட்சியர் சொல்லியிருக்கிறார். மீண்டும் அமைச்சர் பெயரை சொல்லி கரூர் கம்பெனியினர் வந்தால் அனைத்து கடைகளையும் பூட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 249

0

0