2 மணிநேரத்திற்கு மேலாக நடந்த அணிவகுப்பு… பெண் காவலருக்கு நேர்ந்த கதி ; சுதந்திர தின நிகழ்ச்சியில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
15 August 2023, 2:56 pm
Quick Share

கரூரில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு நிலவியது.

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 77வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடியேற்றி வைத்தார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.

அணிவகுப்பில் பங்கேற்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நின்றதால் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

அப்போது உடனிருந்த இரண்டு காவலர்கள் மயக்கம் அடைந்த பெண் காவலரை அழைத்துச் சென்று நிழலில் அமர வைத்து, முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், சுதந்திர தின விழாவிற்காக விளையாட்டு மைதானத்தில் தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் சின்டெக்ஸ் தொட்டியில் குடிநீர் வைத்திருந்தனர். அப்போது குடிநீர் தொட்டியில் மூடி கூட இல்லாமல் திறந்தநிலையில், தூசி படிந்து மிகவும் அசுத்தமாகவும், பாசானுடன் இருந்ததால் மாணவர்கள் அந்த தண்ணீரை குடிப்பதற்கு அச்சமடைந்தனர்.

Views: - 297

0

0