நேற்று கீதா கேண்டின்… இன்று வேணு பிரியாணி ஓட்டல் ; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் உணவகங்கள்… அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 7:11 pm
Quick Share

திண்டுக்கல்லில் பிரபல கடை பிரியாணியில் விட்டில் பூச்சி இருந்ததால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் முத்தழகு பட்டியை சேர்ந்தவர் விமல். இவர் தனது உறவினருடன் திண்டுக்கல்லில் உள்ள பிரபலமான வேணு பிரியாணி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் பிரியாணி ஆர்டர் செய்து காத்துக் கொண்டிருந்தார். இவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது. பிரியாணியை சாப்பிட முற்பட்ட பொழுது பிரியாணியில் விட்டில் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கடை நிர்வாகத்தினரிடம் கேட்ட பொழுது, சரியான பதில் கூறாமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த விமல் மற்றும் அவரது உறவினர் அங்கிருந்து உடனடியாக கிளம்பி சென்றனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இச்சம்பவம் உண்மைதான என கண்டறிய திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கலைவாணி தலைமையில் இன்று 18.11.23 வேணு பிரியாணி கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது உணவு தயாரிப்பு கூடம் சுத்தம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய சமையல் பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். உணவு கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பிரியாணியில் விட்டில் பூச்சி இருந்த இச்சம்பவம் குறித்து நிர்வாகத்தினரிடம் விசாரணையும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தயாரித்து உள்ள வைத்திருந்த பிரியாணி ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

மேலும், பிரியாணி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேகரித்த பகுப்பு ஆய்வுக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரக் குறைபாடு தொடர்பாக 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

ஏற்கனவே, கோவையில் பிரபல உணவகமான கீதா கேண்டீனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கூல் லிப் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Views: - 241

0

0