‘மரணத்தை வெல்வது சாத்தியமா..?’ எதிர்கால முன்னணி ஆராய்ச்சி பற்றி விளக்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத்!!

Author: Babu Lakshmanan
21 November 2022, 12:03 pm
Quick Share

கன்னியாகுமரி ; கடந்த 50 ஆண்டுகளில் பசி மற்றும் நோய் தாக்கங்களில் இருந்து வெற்றி கண்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குமாரக்கோவில் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், பட்டதாரி மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினர்.

தொடர்ந்து அவர் பேசியதாவது :- நமது சொந்த விண்கலங்களை சுற்றுப்பாதையில் வைக்க பூமியின் ஈர்ப்பு புலத்தை கடந்து பயணிக்க நமது சொந்த ஏவுகணை வாகனங்களை பயன்படுத்தும் நாடு என்பதில் பெருமை கொள்கிறேன். வரும் காலங்களில் கலை, அறிவியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் அதிக வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. அது தான் உங்கள் தொழில்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

பசி மற்றும் நோயின் தாக்கங்களில் இருந்து கடந்த 50 ஆண்டுகளில் வெற்றி கண்டுள்ளோம். மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்துள்ளது. மனிதனின் முக்கிய ஆசைகளில் ஒன்று மரணத்தை வெல்வது, அதை எப்படி சாத்தியமாக்குவது என்பது தான் வரும் காலங்களில் முன்னணி ஆராய்ச்சியாக இருக்கும்.

வரும் கால ஆராய்ச்சிகள் பொறியியல் மற்றும் மனித உறுப்புக்களை மாற்றுவதற்கான தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் தென்படும். இருந்தாலும் மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் தொழில் அறிவார்ந்த இயந்திரங்களால் கைப்பற்றப்படும், என பேசினார்.

Views: - 783

0

0