‘இன்னும் அரை கிலோ சீனி இருக்கு… நமக்கானதை நம்மதான் கேட்டு வாங்கனும்’…ரேஷன் கடையில் தில்லு முல்லு ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
29 June 2023, 3:41 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பிலாவிளை ரேஷன் கடையில் அரிசி மற்றும் சீனி ஐ எடை குறைவாக வழங்கிய ஊழியரிடம் ரேஷன் அட்டைதாரர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார் மடம் காட்டாதுரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிலாவிளை பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊழியர்கள் எடை குறைவாக வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், அந்த ரேஷன் கடையில் ரேஷன் அட்டைதாரர் ஒருவர் தனது தாயுடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது, அந்த ரேஷன் கடை ஊழியர் அவருக்கு வழங்கப்பட்ட அரிசியில் 500 கிராம் குறைவாகவும், சீனியில் 100 கிராம் குறைவாகவும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, அந்த ரேஷன் அட்டைதாரர் அரிசி மற்றும் சீனி-ஐ எடை குறைவாக வழங்கிய ஊழியரிடம் ரேஷன் அட்டைதாரர், “இன்னும் அரைக் கிலோ சீனி உண்டு. 100 கிராம் சீனி குறைவு, 100 கிராம் சீனியும் தரணும், அதென்ன உங்களுக்கு நமக்குள்ளத நம்மதான் வாங்கணும். 100 கிராம் சீனி உண்டு. விட்டுட்டு ஒண்ணும் போக முடியாது, “ரோடு சரி கிடையாது” “ரேஷன் கடையில கொள்ளை” என கூறி மல்லுக்கட்டி பொருட்களை சரியான எடையில் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 230

0

0