பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் வெட்டி ஊராட்சி மன்ற தலைவர் கொடூரக்கொலை ; சென்னையில் அதிபயங்கரம்!!

Author: Babu Lakshmanan
18 November 2022, 11:56 am

காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவரை, பெட்ரோல் குண்டுவீசி, அரிவாளால் மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45) மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்தார். நேற்றிரவு இவரை செல்போனில் தொடர்பு கொண்ட சிலர், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்லியதாக தெரிகிறது. அதன்பேரில், அவரும், ராகவேந்திரா நகர் பாலம் அருகில் சென்றுள்ளனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் முதலில் அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியுள்ளது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத வெங்கடேசன், காயமடைந்து நிலைகுலைந்து போனார். உடனே மறைந்திருந்த மர்ம கும்பல், வெங்டேசனை கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரி வெட்டி கொடூரமாகத் தாக்கி விட்டு தப்பியோடியது. இதில் வெங்டேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடேசன் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வு செய்யக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பதற்றநிலையை தணிக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • trisha dance in public because of booze said by sabitha joseph மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?