தமிழனுக்கும், தமிழுக்கும் எதிரான கட்சி பாஜக… பிரதமர் மோடியை எதிர்க்க ஒரேவழி இதுதான் ; எம்பி ஜோதிமணி சொன்ன ரகசியம்..!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 9:13 pm
Jothimani Mp - Updatenews360
Quick Share

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்து மத்திய அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வீட்டை காலி செய்யுமாறு கூறியதை கண்டிக்கும் வகையில், எங்கள் வீடு ராகுல் வீடு என்ற பிரச்சார இயக்கத்தை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தொடங்கியுள்ளார்.

இந்த பிரச்சார இயக்கம் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது. 100 நாட்கள் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சந்தித்தார். அவர்களோடு தரையில் அமர்ந்து அவர்களுடைய குறைகளை கேட்டு அறிந்ததோடு, ராகுல் காந்தியை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு தொகுதி நீக்கம் செய்து அவருடைய வீட்டையும் காலி செய்யுமாறு கூறியுள்ளனர் என்றும், அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நம்முடைய வீடு ராகுல் வீடு என்று பிரச்சாரம் செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜோதிமணி பேசியதாவது:- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து களம் கண்டு வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் அனைவரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. பாஜகவை துணிவுடன் எதிர்கொள்ளும் ஒரே தலைவர் ராகுல் காந்தியாக உள்ளார்.

கர்நாடகா தேர்தல் முடிந்து ராகுல் காந்தி இரண்டாவது நடை பயணத்தை தொடக்க உள்ளார். கர்நாடகாவில் நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையே தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதையெல்லாம் பண்ணாமலே பார்த்துக் கொண்டு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தார்.

இது ஒவ்வொரு தமிழனுக்கும், அவமானம் தமிழனுக்கு எதிரான கட்சி பாஜக என்பது இதிலிருந்து வெட்ட வெளிச்சம் ஆகிறது. அண்ணாமலை ஏற்கனவே தன்னுடைய முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெருமைமிகு கண்ணடியான் என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் டெல்லி செல்வது என்பது புதிதல்ல. அவர் ஜனாதிபதியை சந்திப்பது அரசு முறை பயணம் மட்டுமே. ஆனால், அதிமுக – பாஜக இடையே நடந்த கூட்டம் என்பது தங்களது குழாய் அடி சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சென்றுள்ளனர். அதிமுக தனித்து செயல்பட முடியாதவாறு பாஜகவின் ஆளுமைக்குள் சிக்கி உள்ள ஒரு இயக்கமாக அதிமுக மாறிவிட்டது.

2014ஆம் ஆண்டிற்கு பிறகு மத்திய அரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை தினந்தோறும் எதிர்க்கட்சி வீடுகளுக்கு சென்று சோதனை என்ற பெயரில் அங்கு தான் அவருடைய அன்றாட பணியை செய்கின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் அதிக அளவு எதிர்க்கட்சி தலைவர்களின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், எந்த வழக்கும் இதுவரை சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித் துறையால் உண்மையான நிரூபிக்கப்பட்டு தண்டனை வாங்கித் தர முடியவில்லை.

நிதி அமைச்சர் குரலில் பாஜக தான் ஆடியோ டைப் ரிலீவ் செய்துள்ளனர். இதுதான் இவர்களுடைய வேலை பல்வேறு மார்ஃபிங் வேலைகளை செய்து மற்றவர்களை அவமானப்படுத்துவது தான் அவர்களுடைய வேலை, என்றார்.

Views: - 218

0

0