EARN பண்ணணும் என்பதை விட LEARN பண்ணணும் என சிந்திக்க வேண்டும் ; மாணவர்களுக்கு பிரபல தொழிலதிபர் அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
9 February 2024, 8:11 pm
Quick Share

அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று பொறியியல் மாணவர்களுக்கு KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash அறிவுரை வழங்கினார்.

கோவையில் உள்ள KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் என்ஜினியரிங் துறை சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்காக CIVISTRA எனும் தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash கலந்து கொண்டார்.

இந்தக் கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும். சிவில் என்ஜினியர்ஸ்-க்கு பெரிய முதலீடு தேவையில்லை. நீங்கள் ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என்றால் பெரிய கனவு இருந்தால் மட்டும் போதும்.

பிடித்தமான துறையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் பெரும்பாலானோர் சீக்கிரம் EARN பண்ணணும் என்று நினைக்கின்றனர். ஆனால், சீக்கிரம் LEARN பண்ண வேண்டும் என்று நினைத்தாலே போதும் வெற்றி அடையலாம்,” என்று கூறினார்.

Views: - 184

1

0