சாதி வேறுபாடு காட்டி அரசியல் இலாபம் பெற ஆ.ராசா முயற்சி : முதலமைச்சர் குறித்த ஆபாச பேச்சிற்கு கொங்கு வேளாளர் கூட்டமைப்பு கண்டனம்..!!

Author: Babu Lakshmanan
27 March 2021, 7:34 pm
a rasa -DMK - updatenews360
Quick Share

சென்னை : முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்த திமுக எம்பி ஆ.ராசாவின் ஆபாசமான பேச்சிற்கு கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தாயாரை ஆபாசமான வார்த்தைகளை கூறியை திமுகவின் எம்பி ஆ.ராசா தவறான வார்த்தைகளை கூறி பேசியதற்கு தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், திமுக எம்பி. ஆ.ராசாவின் இந்தப் பேச்சிற்கு கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திமுக கழகத்தின்‌ நாடாளுமன்ற உறுப்பின்‌ திரு. ஆ.ராசா அவர்கள்‌ மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களின்‌ தாயார்‌ பற்றி திட்டமிட்டு பொய்யாக தரக்குறைவான மன்னிக்க முடியாத வார்த்தைகளில்‌ பேசியிருப்பதை கொங்கு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

பெரம்பலூரிலிருந்து கொங்கு மண்டலத்தின்‌ நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஆ. ராசா கொங்கினத்தின்‌ பெண்மணியை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது அரசியல்‌ நோக்கமாக கருத இடமில்லை. சமுதாய நல்லிணக்கம்‌ பேணிகாக்கும்‌ கொங்கு மண்டலத்தில்‌ சாதி வேறுபாடு காட்டி அரசியல்‌ இலாபம்‌ தேடும்‌ முயற்சியாக கொங்கிணத்தின்மேல்‌ கொண்ட வெறுப்பின்‌ காரணமாக அவரின் பேச்சு இருப்பதாக கருதுகிறோம்‌.

கொங்கினத்தின்‌ பெண்மணியை அவதூறாக பேசிய ஆ. ராசா உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்‌ என வற்புறுத்துகிறோம்‌. அவர்‌ சார்ந்த கட்சியின்‌ தலைவர்‌ இதை கண்டிக்காதது அரசியல்‌ நாகரீகம்‌ தமிழகத்தில்‌ சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 340

0

0