குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் குண்டாஸ் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 6:02 pm
Goonda
Quick Share

குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் குண்டாஸ் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை!!

மன்னார்குடியில்  குழந்தை  கடத்தல் தொடர்பாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பூக்கொல்லை தெருவை சேர்ந்த சதீஷ்குமார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கடந்த இரண்டு நாட்களாக குழந்தைகளை வட மாநிலத்தில் இருந்து ஒரு கும்பல் வருகிறது என்கிற போலி தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதில் எந்த மாவட்டத்திலும் குழந்தைகள் கடத்தப்பட்டதற்கான உண்மையான செய்திகள் இல்லை சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இது மாதிரியான தகவல்களை பொதுமக்களுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக கூறிக் கொள்கிறோம். வதந்திகளை பரப்ப வேண்டாம் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல்களை கூறி அதனை விசாரித்துக் கொள்ளுங்கள்.

சமூக வளைதளத்தில் மீது அவதூறு பரப்புவோர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் மன்னார்குடியில் அடிதடியில் ஈடுபட்ட வீடியோவை குழந்தை கடத்துபவர்கள் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட மன்னார்குடி நகராட்சியில் டிராக்டர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் பூக்கொல்லைத்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை மன்னார்குடி துணை கண்காணிப்பாளர் அஸ்வத் உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

இந்த தகவல் முற்றிலும் பொய்யானது.வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் குழந்தைகளை கடத்துபவர்கள் என பரப்புவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி கடுமையாக எச்சரித்தார்.

Views: - 193

0

0