காதலன் கைவிட்டதால் விரக்தி… IAS பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை ; நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல்!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 9:20 pm
Quick Share

திண்டுக்கல் : வத்தலகுண்டு அருகே காதலன் கைவிட்டதால் IAS பயிற்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், காதலன் மீது நடவடிக்கை எடுக்க மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் சுப்பிரமணி. இவர மகன் சதீஷ்குமார் (28). இவரும் இதே ஊரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் பிரபா (28) இருவரும் பழைய வத்தலக்குண்டு டியூசன் சென்டரில் ஒன்றாக படித்து வந்துள்ளனர். அப்போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது.

தற்போது சதீஷ்குமார் படித்து முடித்து ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். பிரபா சென்னையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டரில் கடந்த வருடம் படித்து முடித்துள்ளார். இருவருக்குமான காதல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், சதீஷ்குமாருக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்க்கத் தொடங்கினர். இது தொடர்பாக பிரபா சதீஷ்குமாரிடம் கேட்டபோது பதில் கூறவில்லை என தெரிகிறது.

அதை தொடர்ந்து, காவல் நிலையத்தில் பிரபா புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் சதீஷ்குமாரை விசாரித்து மேற்கொண்ட நிலையில், கடந்த எட்டாம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து கொண்டிருந்தனர்.

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்ததால் பொறுமை இழந்த பிரபாவின் உறவினர்கள் பிற்பகல் வத்தலகுண்டு காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நிலக்கோட்டை டிஎஸ்பி., முருகன் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் சதீஷ்குமாரை கைது செய்தால் தான் மறியலை கைவிடுவதாக கூறியதை அடுத்து, திருச்சியில் தங்கி இருந்த தீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்த போட்டோ காட்டியபின் மறியலை கைவிட்டனர். எனினும், வத்தலகுண்டு காவல் நிலையம் கொண்டு வந்த பிறகே கலைந்து செல்வோம் எனக்கூறி காவல் நிலைத்தில் திரண்டுள்ளனர்.

காதலால் ஐ.ஏ.எஸ்., மாணவி தற்கொலை செய்து கொண்டு, மாணவி புதைத்து 2 நாட்கள் கழித்து உறவினர்கள் திடீர் மறியலால் வத்தலகுண்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 375

0

0