நாளை முதல் எம்.சாண்ட், ஜல்லி விலை கிடுகிடு உயர்வு… கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி சங்கம் சுற்றறிக்கை வெளியீடு!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 8:53 pm
Quick Share

எம்.சாண்ட், ஜல்லி விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி சங்கம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கிரஷர் மற்றும் குவாரி தொழில்கள் தற்போது நெருக்கடியில் உள்ளது. தமிழக அரசின் கனிமவளத்துறை ராயல்டி கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. மின் கட்டணமும் இரு மடங்காகியுள்ளது. ஜிஎஸ்டி துறை மூலமாக கிரஷர் மற்றும் குவாரிகளுக்கு கடும் நெருக்கடி வழங்கப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகளுக்கு கிரஷர் மற்றும் குவாரி தொழிலுக்கான ஆட்கள் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது. வேலையாட்கள் கூலி உயர்வும் இரு மடங்கு ஆகிவிட்டது. மெஷின்ரிகான உதிரிபாகங்கள் விலை உயர்வு அதிகமாகிவிட்டது. லாரிகளுக்கான வரியும் உயர்த்தப்பட்டுவிட்டது. இந்த இக்கட்டான சூழலில் கட்டுமான பொருட்களை விலை ஏற்றம் செய்வது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய விலைப்பட்டியல்

  • M sand 4000 ரூபாய்
    • P Sand 5000 ரூபாய்
    • Blue Metals 3000 ரூபாய்
    • 10 கிலோ மீட்டர் வரை ரூபாய் 1000 லாரி வாடகை.
    • ஜிஎஸ்டி 5% கூடுதலாக வசூல் செய்யப்பட வேண்டும்.
    • கிரஷர் மற்றும் குவாரி இயங்கும் நேரம் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
    • திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே .
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

மேற்குறிப்பிட்ட நடைமுறையின் படி இயக்க சங்கத்தால் மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அந்தந்த கமிட்டி மெம்பர்களை தொடர்பு கொள்ளவும்.

பொள்ளாச்சி பகுதிக்கு சின்னு அவர்களும் – 98422 14641
தேக்காணி காரச்சேரி பகுதிக்கு KM சுந்தர்ராஜ் – 97881 75338 மற்றும் கதிர்வேல் – 99655 05523 மதுக்கரை பகுதிக்கு காமராஜ் அவர்களும் – 78689 00777
மேட்டுப்பாளையம் பகுதிக்கு ஞானசேகர் அவர்களும் – 98422 04259
பெரிய குயில் பகுதிக்கு எஸ் கே பிரபு அவர்களை தொடர்பு கொள்ளவும் +91 97885 66667.

நமது பக்கத்து மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கரூர் இதே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதலால் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் புதிய விலையேற்றத்தை பின்பற்றி தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி செய்யும் விதமாக விலையேற்றத்தை உபயோகப்படுத்தி கொள்ளவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை KCP Infra Limited நிறுவனரும், கோவை மாவட்டட கிரஷர் மற்றும் குவாரி நலச்சங்கத் தலைவருமான K.Chandraprakash கூறியுள்ளார்.

Views: - 336

0

0