மேடம் நான் உங்களோட அடிமை கிடையாது.. நான் ரொம்ப நல்ல போலீஸ் : மருத்துவ விடுப்பு கேட்டு திருச்சி எஸ்ஐ வெளியிட்ட கண்ணீர் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2024, 6:44 pm
Police SI
Quick Share

மேடம் நான் உங்களோட அடிமை கிடையாது.. நான் ரொம்ப நல்ல போலீஸ் : மருத்துவ விடுப்பு கேட்டு திருச்சி எஸ்ஐ வெளியிட்ட கண்ணீர் வீடியோ!

திருச்சி காவலர் பயிற்சி பள்ளி உதவி ஆய்வாளர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறுகையில், சிஎல்ஐ சுகுணா மேடம்.. நாம் எவ்வளவு அற்புதமான பயிற்சி மையத்தில் இருக்கிறோம்.. இங்கு ஒருத்தர ஒருத்தர் விரோதம் பாராட்டி என்ன பண்ண போகிறோம் மேடம்..

அன்றைக்கு நான் மெடிக்கல் லீவு வாங்கி வந்தேன் . நான் இரண்டு நாட்களாக அரசு மருத்துவமனையில் ஒபி பார்த்திருக்கிறேன்.. ஒபில எனக்கு 186 இருந்தது.. உடனே என்ன ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகச் சொன்னாங்க.. இசிஜி எடுக்க சொன்னாங்க..

இசிஜி பார்த்த மருத்துவர்.. உடனே ஸ்பெசலிஸ்ட்டை பார்க்கணும்.. நீங்கள் உடனே அட்மிட் ஆக வேண்டும்.. ஏற்கனவே உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி ஏற்கனவே நான் கேட்டேன்.. நீங்கள் ட்ரெயினிங் முடிந்த பின்னர் போகலாம் என்று சொன்னீர்கள்.. ட்ரெய்னிங் முடிந்துவிட்டது. நான் மேடம் இடம் போய் லீவு கேட்குறீங்க.. ஏன் இப்படி பண்றீங்க மேடம்.. ஏன் விரோதம் பாராட்டுறீங்க..

எனக்கு சர்வீஸ் முடிய ஐந்து மாதம் தான் இருக்கிறது.. 37 வருசம் சர்வீஸ் முடித்துவிட்டேன்.. நான் முன்னாடி வாங்கிய தண்டனை விசாரணையில் இருக்கிறது. 120 நாளில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று அரசாணை சொல்கிறது.. பாருங்க மேடம்.. அதுல நான் ஒழுங்கா ரிட்டயர்டு ஆவனா என்று தெரியவில்லை..

அதற்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டு வேதனையில் இருக்கிறேன்.. நான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்.. உங்கள் மகளை அழைத்துக் கொண்டு போய் சீட்டு வாங்கி கொடுத்தேன், அதற்கு நன்றியா காட்டுறீங்க..

நீங்க நல்லா இருக்கனும் மேடம்.. உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். நான் இதய பாதிப்பில் இருக்கிறேன்.. முடியல மேடம்.. நான் ஒரு நல்ல போலீஸ் மேடம்.. தமிழ்நாடு காவல்துறையை அந்த அளவிற்கு நேசித்தேன் மேடம்..

கடைசியில உங்கள மாதிரி ஆபிசர்ஸ் கிட்ட வேலை செய்யக்கூடிய பாக்கியத்தை கடவுள் எனக்கு கொடுத்துட்டாரு.. நான் உங்கள விரோதம் பாராட்டல.. உங்களுக்கு கீழ வேலை செய்வங்களோட பிரச்சனைகளை பேசுங்க மேடம்.. கொஞ்சம் சிரிங்க மேடம்.. ஏன் கடுகடுவென இருக்கீங்க.. என்னால முடியல மேடம்.. நான் ரொம்ப பாவம் மேடம்.. நான் எப்படி வாழுறேனு உங்களுக்கு தெரியாது.. மருத்துவ விடுப்பு தாருங்கள்.. நான் உங்களின் அடிமை கிடையாது” என்று கூறியுள்ளார்.

Views: - 368

0

0