அரசுப் பேருந்து மீது வேகமாக வந்த பைக் மோதி விபத்து ; பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
26 October 2023, 11:19 am

மதுரை பசுமலை பகுதியில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது..

சிவகாசியிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுரை பசுமலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அரசு பேருந்து மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை உசிலம்பட்டி தாலுக்கா மையம்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டி (23) பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்ட பகுதி மக்கள் இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

https://player.vimeo.com/video/878166063?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479
  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 458

    0

    0